Go back to Main Post
தரம் 12க்கு உரிய விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வதற்கு உரிய இறுதித் திகதியை பிற்போடல்
2021ஆம் ஆண்டின் உயர்தர தொழிற்பாடத் துறையின் (பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம்) கீழ் தரம் 12இல் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வதற்கு உரிய இறுதித் திகதி பிற்போடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை 2021 நவம்பர் மாதம் வரை பாடசாலைகளில் ஏற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சகல விண்ணப்பதாரர்களும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகளின் பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமானஃ பிரவேசிக்கக் கூடிய பாடசாலைகளை தெரிவு செய்து அப் பாடசாலையை தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்கள் கையளிக்க வேண்டிய திகதி உட்பட ஏனைய முக்கியமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.